மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்


மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
x
தினத்தந்தி 16 Aug 2023 12:15 AM IST (Updated: 16 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிளை மாரிமுத்து எம்.எல்.ஏ. வழங்கினார்.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பாலமுருகன் தலைமை தாங்கினர். ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர், நகரமன்ற தலைவர் கவிதா பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நூலகர் ஆசைத்தம்பி வரவேற்றார். மாரிமுத்து எம்.எல்.ஏ, மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிளை வழங்கி பேசுகையில் தமிழக அரசு மாணவர்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த நலத்திட்டங்களை பயன்படுத்தி மாணவர்கள் வாழ்கையில் முன்னேற வேண்டும். மாணவர்கள் பல்வேறு விதமான ஊடகங்களை பயன்படுத்தி கல்வியில் மட்டுமல்லாது, சமுதாய சேவைகளை செய்து தலைமை பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். விளையாட்டு, கலை இலக்கியம் மற்றும் போட்டி தேர்வுகளில்் வெற்றி பெறும் வகையில் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.என்றார். ஆசிரியர் நடராஜன் நன்றி கூறினார்.


Next Story