மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
அத்தனாவூர் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு தேவராஜ் எம்.எல்.ஏ. விலையில்லா சைக்கிள் வழங்கினார்.
திருப்பத்தூர்
ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏலகிரிமலையில் உள்ள அத்தனாவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி சிறப்புரையாற்றினார். ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் முன்னிலை வகித்தார்.
விழாவில் முதன்மை கல்வி அலுவலர் முனிசுப்பராயன், மாவட்ட கவுன்சிலர் கவிதாதண்டபாணி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அ.திருமால், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி செந்தில்குமார், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story