வல்லம் ஒன்றியத்தில் 412 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்


வல்லம் ஒன்றியத்தில்    412 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்    அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்
x

வல்லம் ஒன்றியத்தில் 412 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.

விழுப்புரம்

செஞ்சி,

வல்லம் ஒன்றியத்துக்குட்பட்ட மேல்சித்தாமூர், வீரணாமூர், மேல்ஒலக்கூர், இல்லோடு, நெநகனூர் ஆகிய கிராமங்களில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் 412 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி அந்தந்த பள்ளிகளில் நடைபெற்றது. மேல் சித்தாமூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வல்லம் ஒன்றியக்குழு தலைவர் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார். மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். செஞ்சி கல்வி மாவட்ட அலுவலர் சுப்பராயன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு மாணவ-மாணவிகள் 127 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் வல்லம் ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, துரை, இளம்வழுதி, பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமணன், ஊராட்சி மன்ற தலைவர் மகிமைதாஸ், துணைத் தலைவர் முருகன், பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் சமுத்திர விஜயன், ஒன்றிய பொருளாளர் தமிழரசன், நிர்வாகிகள் ராஜா, மண்ணாகட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தில்வேலன் நன்றி கூறினார். இதேபோல் வீரணாமூர் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 69 மாணவர்களுக்கும், மேல்ஒலக்கூர் பள்ளி மாணவர்கள் 44 பேருக்கும், நெகனூர் பள்ளி மாணவர்கள் 96 பேருக்கும், இல்லோடு பள்ளி மாணவர்கள் 76 பேருக்கும் விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.


Next Story