மாணவர்களுக்கு இலவச சைக்கிள்


மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
x

மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது

திருநெல்வேலி

பேட்டை:

மானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. மானூர் யூனியன் தலைவர் ஸ்ரீலேகா அன்பழகன், மானூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்பழகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 192 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினர். தலைமை ஆசிரியர் குமாரி பிரபா, மாவட்ட பிரதிநிதிகள் வின்சென்ட், முகமது அலி, மகளிர் அணி மேகலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story