இலவச சைக்கிள் வழங்கும் விழா


இலவச சைக்கிள் வழங்கும் விழா
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-24T00:16:13+05:30)

பங்களா சுரண்டை பேரன்புரூக் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது

தென்காசி

சுரண்டை:

பங்களா சுரண்டை பேரன்புரூக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தாளாளர் லார்டுவின் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் முன்னிலை வைத்தனர். தலைமை ஆசிரியை ஹெலன் கிருபா அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தென்காசி எம்.எல்.ஏ. பழனி நாடார், சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன் ஆகியோர் கலந்து கொண்டு 120 மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினர். முடிவில் உதவி ஆசிரியர் சுகுமார் நன்றி கூறினார்.


Next Story