இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி
விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காரைக்குடி,
காரைக்குடி அழகப்பா அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாங்குடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். காரைக்குடி நகர் மன்ற தலைவர் முத்துத்துரை முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜபாண்டியன் வரவேற்றார். இதையொட்டி காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 14 அரசு பள்ளிகளை சேர்ந்த 1,700 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை மாங்குடி எம்.எல்.ஏ., நகர் மன்ற தலைவர் முத்துத்துரை வழங்கினர்.
இதில், தேவகோட்டை கல்வி மாவட்ட அலுவலர் சண்முகநாதன், சாக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் சொக்கலிங்கம், காரைக்குடி நகராட்சி கவுன்சிலர்கள் சித்திக், சொ, கண்ணன், நகர காங்கிரஸ் தலைவர் பாண்டி மெய்யப்பன், நகர செயலாளர் குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.