359 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்
கன்னிவாடி நவாப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
கன்னிவாடி நவாப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொருளாளர் சத்தியமூர்த்தி, ரெட்டியார்சத்திரம் ஒன்றியக்குழு தலைவர் சிவகுருசாமி, கன்னிவாடி தி.மு.க. நகர செயலாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் வரவேற்றார்.
விழாவில் அமைச்சர் இ.பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நவாப்பட்டி, தர்மத்துப்பட்டி, கோனூர், அனுமந்தராயன்கோட்டை, புதுப்பட்டி, மயிலாப்பூர் பள்ளிகளில் படிக்கும் 359 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். அவர் பேசும்போது, சந்திராயன் விண்கல ஆராய்ச்சியில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த விஞ்ஞானிகள் மயில்சாமி அண்ணாதுறை, வனிதா, வீரமுத்துவேல் ஆகியோர் அரசு பள்ளிகளில் படித்தவர்கள் தான். இன்றைய காலத்தில் பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். தமிழக அரசின் திட்டங்கள், சலுகைகளை பயன்படுத்தி மாணவர்கள் கல்வியில் சிறந்தவர்களாக விளங்க வேண்டும் என்றார்.
விழாவில் கன்னிவாடி பேரூராட்சி தலைவர் தனலட்சுமி சண்முகம், துணைத்தலைவர் கீதா முருகானந்தம், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலு, பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் ஆர்.டி.ராஜசேகர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஷ் பெருமாள், தெத்திப்பட்டி தி.மு.க. பொறுப்பாளர் முத்துப்பாண்டி, மாவட்ட பிரதிநிதிகள் பெருமாள், ஜீவானந்தம், தி.மு.க. பொறுப்பாளர் கரிசல் ஜோசப் ஆசான், கன்னிவாடி நகர அவைத்தலைவர் சர்புதீன், துணைச்செயலாளர்கள் கலையரசன், வீரமோகன், பொருளாளர் பிச்சைமுத்து. ஒன்றிய பிரதிநிதிகள் பழனிச்சாமி, சரவணன், வார்டு செயலாளர்கள் தெய்வேந்திரன், காளியப்பன், முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மலரவன், கிருஷ்ணன், ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை மகேஸ்வரி நன்றி கூறினார்.