அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச ைசக்கிள்கள்
முள்ளுக்குறிச்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை ராஜேஷ்குமார் எம்.பி. வழங்கினார்.
முள்ளுக்குறிச்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை ராஜேஷ்குமார் எம்.பி. வழங்கினார்.
ராஜேஷ்குமார் எம்.பி.
நாமகிரிப்பேட்டை ஒன்றியம் முள்ளுக்குறிச்சி ஊராட்சி உண்டு உறைவிட அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. ராஜேஷ்குமார் எம்.பி. கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.பி.ராமசாமி தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் சித்ரா முன்னிலை வகித்தார். இதில் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சத்திரம் ஒன்றியம்
புதுச்சத்திரம் ஒன்றியம் காரைக்குறிச்சிபுதூர், செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் களங்காணி அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, 308 மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். இதேபோல் பாச்சல், திருமலைப்பட்டி அரசினர் மேல்நிலை பள்ளிகளில் நடந்த விழாவில் 74 மாணவர்கள், 64 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை ராமலிங்கம் எம்.எல்.ஏ. வழங்கினார்.
நிகழ்ச்சிகளில் புதுச்சத்திரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் துரை, வடக்கு ஒன்றிய செயலாளர் கவுதம், புதுச்சத்திரம் ஒன்றிய குழு தலைவர் சாந்தி வெங்கடாசலம், துணைத் தலைவர் ராம்குமார், தலைமை ஆசிரியர்கள் சரவணன், அன்பழகி, சண்முகம், மோகன்குமார், ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.