மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்


மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்
x

ஜவ்வாதுமலையில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை சரவணன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

திருவண்ணாமலை

கலசபாக்கம்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலையில் நம்மியம்பட்டு உண்டு உறைவிட பள்ளியில் படிக்கும் 33 மாணவ-மாணவிகளுக்கும், குனிகாத்தூர் மலைவாழ் மக்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 183 மாணவ-மாணவிகளுக்கும், ஆட்டியானூர் உண்டு உறைவிட பள்ளியில் படிக்கும் 15 மாணவ- மாணவிகளுக்கும் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தி.சரவணன் தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கி பேசினார்.

அவர் பேசுகையில், தமிழக அரசின் சார்பில் பல்வேறு நிதி உதவிகள் கிடைக்கும் வகையில் நீங்கள் படித்து வருகிறீர்கள். நிலவுக்கு சந்திரயானை வெற்றிகரமாக அனுப்பியது அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் தான் விஞ்ஞானிகளாக உருவெடுத்தார்கள் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.

உங்களின் விடாமுயற்சியும், வெற்றியும், இந்த பகுதி மட்டுமல்லாது தமிழ்நாடு பேசப்படும் அளவிற்கு உங்களின் வளர்ச்சி இருக்க வேண்டும். மாணவிகள் நல்ல முறையில் படித்து, வேலைக்கு சென்றபின்னர் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் உங்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்றார்.

நிகழ்ச்சியில் துணை ஆட்சியர் (திட்ட அலுவலர்) செந்தில்குமார், ஒன்றியக்குழு தலைவர் ஜீவாமூர்த்தி, துணை தலைவர் மகேஸ்வரிசெல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர் வேணுகோபால், ஊராட்சி மன்ற தலைவர் நடேசன் உட்பட அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

1 More update

Related Tags :
Next Story