200 ஆண்டு பழமை வாய்ந்த அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள்
திருப்பத்தூரில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு பள்ளியில் மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச ைசக்கிள்களை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்.
திருப்பத்தூரில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு பள்ளியில் மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச ைசக்கிள்களை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்.
திருப்பத்தூர் டவுன் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள 200 ஆண்டு பழமை வாய்ந்த அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு சார்பில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆவின் பால்வளத் தலைவர் எஸ்.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் டி கார்த்திகேயன் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஆடிட்டர் டி ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக திருவண்ணாமலை தொகுதி சி என்.அண்ணாதுரை எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கா. தேவராஜ், ஏ.நல்லதம்பி ஆகியோர் கலந்து கொண்டு அரசு வழங்கிய இலவச சைக்கிளை மாணவர்களுக்கு வழங்கி பேசினர்.
நிகழ்ச்சியில் நகராட்சித் தலைவர் சங்கீதா வெங்கடேஷ், துணைத் தலைவர் சபியுல்லா நகராட்சி கவுன்சிலர்கள் டிஎன்டிகே சுபாஷ், வெள்ளை ராஜா என்கின்ற கேவி ராஜேந்திரன், உள்ளிட்ட பலர் பேசினர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பட்டதாரி ஆசிரியர் யூ. பாஸ்கரன் நன்றி கூறினார்.