மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்

மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்
x

மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

திருப்பத்தூர்

ஆம்பூர்

மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

ஆம்பூரை அடுத்த மாதனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஆம்பூர் வில்வநாதன் எம்.எல்.ஏ., மாதனூர் ஒன்றிய குழு தலைவர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு 173 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.

நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர்கள் முனிசுப்ரமணியன், மாதனூர் ஒன்றிய அவைத்தலைவர் ராமமூர்த்தி, தலைமை ஆசிரியர் தெய்வநாயகம், ஒன்றிய குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story