முகாமில் பங்கேற்ற 47 பேருக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சை


முகாமில் பங்கேற்ற 47 பேருக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சை
x
தினத்தந்தி 15 March 2023 12:15 AM IST (Updated: 15 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

முதுகுளத்தூர் அருகே முகாமில் பங்கேற்ற 47 பேருக்கு இலவச கண்புைர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர் அருகே உள்ள கொழுந்துறை கிராமத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமை தமிழக பிற்படுத்தப்பட்ட நலத்துறை கதர் வாரியம் மற்றும் தொழில் வாரியத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் முதுகுளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராம பகுதியில் இருந்து கலந்து கொண்ட 47 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை செய்த 47 பேரும், முகாமில் பயன் அடைந்த மக்களும் இந்த முகாமுக்கு ஏற்பாடு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.

1 More update

Related Tags :
Next Story