விவசாயிகளுக்கு இலவச மிளகாய் விதைகள்


விவசாயிகளுக்கு இலவச மிளகாய் விதைகள்
x
தினத்தந்தி 17 Sept 2022 12:15 AM IST (Updated: 17 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் விவசாயிகளுக்கு இலவச மிளகாய் விதைகள் வினியோகம் செய்யப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக கே.1 ரக மிளகாய் விதைகள் மற்றும் செங்காம்பு கருவேப்பிலை நாற்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கோழிக்கோடு பாக்கு மற்றும் நறுமண பயிர்கள் மேம்பாட்டு இயக்குனரக ஒருங்கிணைந்த தேசிய தோட்டக்கலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பாரம்பரிய மற்றும் அதிக காரமுள்ள மிளகாய் ரகமான கோவில்பட்டி1-ஐ பரவலாக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்க செங்காம்பு கருவேப்பிலை பயிரிடுவதன் மூலம், தினசரி வருமானம் பெறவும் முயற்சி மேற்கொள்ளும் நோக்கத்துடன் ,இந்த நிகழ்ச்சி நடந்தது. வேளாண்மை ஆராய்ச்சி நிலைய தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். திட்டத்தின் ஆராய்ச்சியாளர் சுதாகர் வரவேற்று பேசினார். பேராசிரியர் குரு விளக்கவுரையாற்றினார். 15 முன்னோடி விவசாயிகளுக்கு இலவச மிளகாய் விதைகள் மற்றும் கறிவேப்பிலை நாற்றுகள் வழங்கப்பட்டது. பேராசிரியை ஆர்த்திராணி நன்றி கூறினார்.


Next Story