கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு 15-ந் தேதி தொடங்குகிறது

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-1 மற்றும் குரூப்-2 முதல்நிலை தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) தொடங்குகிறது.
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடைபெற இருக்கும் குரூப்-1 மற்றும் குரூப்-2 முதல்நிலை தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) முதல் தொடங்கி நடைபெற உள்ளது.
இப்பயிற்சி வகுப்பு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்களில் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும். மேலும் இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 94990 55908 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
தயாராகும் இளைஞர்கள்
இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன், கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும் இத்தேர்விற்கு தயாராகும் கடலூர் மாவட்டத்தினை சேர்ந்த இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவல் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






