குரூப் 2, 2-ஏ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு


குரூப் 2, 2-ஏ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு
x
தினத்தந்தி 19 Nov 2022 12:15 AM IST (Updated: 19 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

டி.என்.பி.எஸ்.சி. குரூப்2 மற்றும் 2-ஏ முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு கள்ளக்குறிச்சியில் வருகிற 23-ந் தேதி தொடங்க உள்ளதாக கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இலவச பயிற்சி வகுப்பு

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக டி.என்.பி.எஸ்.சி, டி.என்.யு.எஸ்.ஆர்.பி., எஸ்.எஸ்.சி, எம்.ஆர்.பி, பேங்கிங் உள்ளிட்ட பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-2, 2-ஏ தேர்வுக்கான 5,446 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. பின்னர் இதற்கான முதல்நிலை தேர்வில் தேர்ச்சியடைந்தோர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் முதல்நிலை தேர்வில் தேர்வானவர்களுக்கு முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 23-ந் தேதி முதல் தொடங்குகிறது.

25 மாதிரி தேர்வுகள்

இப்பயிற்சி வகுப்பில் முதன்மை தேர்வுக்கான வகுப்புகளும், முழு பாடங்கள் உள்ளடக்கிய 25 மாதிரி தேர்வுகளும், பாடக்குறிப்புகளும் வழங்கப்பட உள்ளது. எனவே குரூப்-2, 2-ஏ முதன்மை தேர்வுக்கு தயாராகும் போட்டி தேர்வர்கள் கள்ளக்குறிச்சி, எண் 18/63, நேப்பால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 முதல் நிலை தேர்வின் நுழைவு சீட்டு மற்றும் புகைப்படத்துடன் தங்களை பதிவு செய்து கொண்டு வருகிற 23-ந் தேதி முதல் தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story