தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப்-2 முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
தூத்துக்குடியில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி சனிக்கிழமை தொடங்குகிறது.
தூத்துக்குடியில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
டி.என்.பி.எஸ்.சி தேர்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 (நேர்முகத் தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) மூலம் 5 ஆயிரத்து 446 காலிப்பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதன்மை தேர்வு 25.02.2023 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ளது.
முதன்மைத் தேர்வுகான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் நேரடி பயிற்சி வகுப்புகள் இன்று (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கோரம்பள்ளத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது.
முன்பதிவு
இந்த போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. எனவே மேற்குறிப்பிட்டுள்ள போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து உள்ள நகலுடன் தங்களது ஆதார் எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை 0461 - 2340159 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.