குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு


குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
x

குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு அரியலூரில் நாளை தொடங்குகிறது.

அரியலூர்

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மத்திய-மாநில அரசுப்பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் விரைவில் அறிவிக்கப்படவுள்ள குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நாளை (புதன்கிழமை) முதல் தொடங்கப்படுகிறது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் சுய விவரக்குறிப்புகளுடன் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம், என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story