குரூப்-2 பிரதான தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நாளை தொடக்கம்


குரூப்-2 பிரதான தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நாளை தொடக்கம்
x

குரூப்-2 பிரதான தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நாளை தொடங்குகிறது.

திருப்பத்தூர்

குரூப்-2 பிரதான தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நாளை தொடங்குகிறது.

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் முலம் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பிரதான தேர்வு எழுதுவதற்காக நாளை (திங்கள்கிழமை) முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தரை தள சி-பிளாக்கில், சிறந்த வல்லுநர்களைக் கொண்டு இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளது. இதில் பயிற்சி பெற விரும்புவோர் தங்களது பெயரினை 7904513450 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.



Next Story