போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்


போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்
x

பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இதில், விருப்பம் உள்ளவர்கள் சேரலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை), இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடத்திற்கும், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள குரூப் 1-க்கான இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த மாதம் 17-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் தற்போது மருத்துவ தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள மருந்தாளுனர் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள பீல்டு சர்வேயர், டிராப்ட் மேன் சிவில், உதவி வரைவாளர் ஆகிய பணியிடங்களுக்கு விரைவில் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. எனவே மேற்கண்ட இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய ஆதார் அட்டை, புகைப்படங்களுடன் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் தொடர்பு கொண்டு பயனடையலாம் என பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story