குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்குகிறது


குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்குகிறது
x

குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் பெரம்பலூரில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

பெரம்பலூர்

இலவச பயிற்சி வகுப்புகள்

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசின் அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு பணிகளுக்காக நடத்தப்படும் எஸ்.எஸ்.சி.-சி.எச்.எஸ்.எல். தேர்விற்கும், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி-2 (குரூப்-2) முதன்மை தேர்வுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நடத்தப்படவுள்ளது.

எஸ்.எஸ்.சி. -சி.எச்.எஸ்.எல். தேர்வுக்கு ஜனவரி மாதம் 4-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.எஸ்.சி. -சி.எச்.எஸ்.எல். தேர்வை பொறுத்தவரை 4,500-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

கல்லூரி மாணவ-மாணவிகள்

தேர்விற்கு விண்ணப்பிப்பவர்களின் குறைந்தபட்ச வயது 18 என்பதால் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரிகளில் பயிலும் மாணவ- மாணவிகள் இந்ததேர்வுக்கு தவறாது விண்ணப்பிக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய ஆதார் அட்டை, புகைப்படங்களுடன் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொண்டு தங்களை பதிவு செய்துக் கொள்ளலாம்.

இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு 94990 55913 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story