2-ம் நிலை காவலர் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு


2-ம் நிலை காவலர் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு
x

2-ம் நிலை காவலர் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் 2-ம் நிலை காவலர் (காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறைத்துறை) மற்றும் நேரடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (சட்டம்-ஒழுங்கு, ஆயுதப்படை மற்றும் சிறப்பு காவல்படை) ஆகிய தேர்வுகள் நடத்தப்படவுள்ளது. இந்த தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட போலீசார், வேலை வாய்ப்பு அலுவலகம் நேரு யுவகேந்திரா ஆகியவை இணைந்து பெரம்பலூர் மாவட்ட இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பினை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேற்று முதல் தொடங்கியது. பயற்சி வகுப்பினை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தொடங்கி வைத்து பேசுகையில், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் கட்டாயம் நாம் எதை நோக்கி பயணிக்கிறோம் என்ற மன உறுதியும், அதற்கான உழைப்பும் கொடுத்தால் அந்த செயலின் இறுதியில் நாம் நினைத்ததை கட்டாயம் அடைய முடியும், என்றார். மத்திய அரசு வேலை வாய்ப்பு குறித்து மாவட்ட நேரு யுவகேந்திரா இளைஞர் அலுவலர் கீர்த்தனா விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். பின்னர் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். முன்னதாக மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.

முடிவில் இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் தமிழ் பாக்யா நன்றி கூறினார்.


Next Story