போலீஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு


போலீஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு
x
தினத்தந்தி 23 Aug 2023 12:15 AM IST (Updated: 23 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் போலீஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு 25-ந் தேதி தொடங்குகிறது என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

திருவாரூர்

திருவாரூர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் போலீஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு 25-ந் தேதி தொடங்குகிறது என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

போலீஸ் பணிக்கான தேர்வு

திருவாரூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக மாநில அரசு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 3,359 இரண்டாம் நிலை போலீஸ், இரண்டாம் நிலை சிறை போலீஸ், தீயணைப்பு படை பணிக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வி தகுதி

இதற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 2023-ம் ஆண்டுஞ ஜூலை 1-ந் தேதியின்படி 18 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த தேர்விற்கு இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்ய அடுத்த மாதம் (செப்டம்பர்) 17-ந் தேதி அன்று கடைசி நாளாகும். இதற்கான இணையதள முகவரி www.tnusrb.tn.gov.in என்பதாகும்.

பயிற்சி வகுப்பு

இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக வருகிற 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் இலவசமாக நேரடி பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது.

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது வேலை வாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-3, ஆதார் அட்டையின் நகல் ஆகியவற்றுடன் மன்னார்குடி ரோடு விளமலில் உள்ள திருவாரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

----

1 More update

Next Story