ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு
திருப்பத்தூரில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை தொடங்குகிறது.
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 6,553 இடைநிலை ஆசிரியர் பணிக்கும், 3,587 பட்டதாரி ஆசிரியர் பணிக்கும் நடப்பு ஆண்டில் தேர்வு நடத்தப்படவுள்ளது. இரு தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் தமிழ், ஆங்கிலம், குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் ஆகிய பாடங்கள் ஒரே மாதிரியாக இருப்பதால், இத்தேர்விற்கு ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகளை அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டங்களில் நடத்துவதற்கு அறிவுரை பெறப்பட்டுள்ளது.
'டெட்' பேப்பர்-1 மற்றும் 2 ஆகியவற்றுக்கு இலவச பயிற்சி வகுப்பு நாளை (திங்கட்கிழமை) திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடங்கப்பட உள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல் அறிய வேலைவாய்ப்பு அலுவலக இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் மற்றும் உதவியாளரை தொடர்பு கொண்டு பெறலாம். திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்.