வங்கி பணி தேர்வுக்கு இலவச பயிற்சி


வங்கி பணி தேர்வுக்கு இலவச பயிற்சி
x

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வங்கி பணி தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்

ஸ்டேட் வங்கியில் துணை மேலாளருக்கான 2 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு 21 வயது முதல் 35 வயது வரை உள்ள ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்தவர்கள் வருகிற 27-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 3 நிலையாக தேர்வுகள் நடைபெறும். இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு தாட்கோ சார்பில் தனியார் பயிற்சி மையத்தின் மூலம் இலவசமாக பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் http://www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Next Story