போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு இலவச பயிற்சி


போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு இலவச பயிற்சி
x
தினத்தந்தி 13 Dec 2022 6:45 PM GMT (Updated: 13 Dec 2022 6:45 PM GMT)

போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு இலவச பயிற்சி

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் கீழ்நிலை பிரிவு எழுத்தர், இளநிலை செயலக உதவியாளர், அஞ்சல் உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் போன்ற பல்வேறு நிலைகளில் 4,500-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப போட்டி தேர்வுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இப்பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி 4.1.2023 ஆகும். இதுகுறித்து கூடுதல் விவரங்களை https://ssc.nic.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம். இந்த போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 16-ந் தேதி தொடங்கப்பட உள்ளது. பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தேர்விற்கு விண்ணப்பித்த விவரங்களோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 9487375737 என்ற எண்ணில் வாட்ஸ் அப் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.


Next Story