போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி


போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி
x
தினத்தந்தி 11 July 2023 6:45 PM GMT (Updated: 11 July 2023 6:46 PM GMT)

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1, 2 போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 15-ந் தேதி தொடங்குகிறது

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1, குரூப்-2 முதல்நிலை தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் வருகிற 15-ந் தேதி முதல் தொடங்கி ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயனடைய விரும்பும் நபர்கள் நாளை மறுநாளைக்குள்(வெள்ளிக்கிழமை) விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி முன்பதிவு செய்து கொள்ளலாம். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1, குரூப்-2 முதல்நிலை தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் வருகிற 15-ந் தேதி முதல் தொடங்கி ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் பாடக்குறிப்புகள் வழங்கப்படும். முழு மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் கள்ளக்குறிச்சி, 18/63 நேப்பால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொண்டோ அல்லது https://forms.gle/jokdw4YCmtuUEM8d8 என்ற இணையதள முகவரியிலோ பதிவு செய்து பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை கலெக்டர்கள் விழுப்புரம் சி.பழனி, கள்ளக்குறிச்சி ஷ்ரவன்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


Related Tags :
Next Story