குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சி:வருகிற 22-ந் தேதி நடைபெறும்


குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சி:வருகிற 22-ந் தேதி நடைபெறும்
x

குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சி வருகிற 22-ந்தேதி நடைபெற உள்ளது என தேனி கலெக்டர் தெரிவித்தார்

தேனி


தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-1 முதல் நிலைத் தேர்வு வருகிற அக்டோபர் மாதம் 30-ந்தேதி நடக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க வருகிற 22-ந்தேதி (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய வளாகத்தில் வருகிற 22-ந்ேததி முதல் நடக்கிறது. பயிற்சியின் போது இலவச பாடக்குறிப்புகள் வழங்குவதோடு, ஒவ்வொரு பாடத்துக்கும் மாதிரி தேர்வுகள், வினாடி-வினா மற்றும் குழு விவாதங்கள் நடத்தப்படும். இந்த பயிற்சியில் சேர விரும்பும் நபர்கள், தங்களின் குரூப்-1 தேர்வுக்கான விண்ணப்ப நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரிடம் சமர்ப்பித்து பயிற்சியில் சேரலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story