சட்ட படிப்பு நுழைவு தேர்வுக்கு இலவச பயிற்சி


சட்ட படிப்பு நுழைவு தேர்வுக்கு இலவச பயிற்சி
x

திருவாரூர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் சட்ட படிப்பு நுழைவு தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது என கலெக்டா சாருஸ்ரீ கூறியுள்ளார்.

திருவாரூர்

திருவாரூர்;

திருவாரூர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் சட்ட படிப்பு நுழைவு தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது என கலெக்டா சாருஸ்ரீ கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சட்டப்படிப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் மூலம் சட்ட பல்கலைக்கழகங்களில் சட்டப்படிப்பு படிப்பதற்கு அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது.

பயிற்சி

இப்பயிற்சியை பெற 18 முதல் 25 வயது நிரம்பிய 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் மற்றும் நடப்பாண்டில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை இணையதளம் வழியாகவும் தேர்வு நடைபெறும் முறை நேரிடையாகவும் நடைபெறும். இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் சட்டப்படிப்பு படிப்பதற்கு ஏனைய நுழைவு தேர்வுகளுக்கும் பயிற்சிகள் வழங்கப்படும்.இப்பயிற்சிக்கான கட்டணம் தாட்கோவால் வழங்கப்படும். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தகுதிவாய்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து பயனடையலாம்.கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோர் திருவாரூர், நாகை பைபாஸ் சாலையில் அமைந்துள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது


Next Story