இரண்டாம் நிலை காவலர், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு இலவச பயிற்சி
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு இலவச பயிற்சி 10-ந்தேதி தொடங்குகிறது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட உள்ள, இரண்டாம் நிலை காவலர் மற்றும் உதவி ஆய்வாளர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க உள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வருகிற 10-ந் தேதி (திங்கட்கிழமை) அன்று தொடங்கப்பட உள்ளது.
மேற்காணும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தங்களது விருப்பத்தினை கைப்பேசி எண்ணுடன் தெரிவிக்கலாம்.
இந்த இலவச பயிற்சி வகுப்பு ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக வேலை நாட்களில் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.