வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு இலவச பயிற்சி


வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு இலவச பயிற்சி
x
தினத்தந்தி 17 May 2023 2:00 AM IST (Updated: 17 May 2023 2:01 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்படுகிறது. இதில் மத்திய-மாநில அரசுகளின் போட்டி தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற இருக்கிறது.

இதையொட்டி சப்-இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. எனவே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் பங்கேற்க விரும்புபவர்கள், இலவச பயிற்சியில் சேரலாம். இதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.


Next Story