ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு இலவச பயிற்சி
திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு இலவச பயிற்சி 21-ந்தேதி தொடங்குகிறது.
திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு இலவச பயிற்சி 21-ந்தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காலிப்பணியிடங்கள்
தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 2023-ம் ஆண்டுக்கான இடைநிலை ஆசிரியர் பணிக்கு தோராயமாக 6,553 காலிபணியிடங்களுக்கும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தோராயமாக 3,887 காலிப்பணியிடங்களுக்கும் தகுதித்தேர்வு நடப்பு ஆண்டில் நடத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த காலிப்பணியிடங்களுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக வருகிற 21-ந் தேதி (திங்கட்கிழமை) திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.
பயிற்சி வகுப்பு
மேலும் தகுதித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் பயன்பெறும் விதமாக நூலக வசதியும். 'வைபை' வசதியும், மாணவர்கள் அமர்ந்து படிக்க ஏதுவான வசதியும் செய்யப்பட்டுள்ளது.
எனவே விருப்பமுள்ள இளைஞர்கள் தங்கனது பெயர் மற்றும் கல்வித்தகுதியை குறிப்பிட்டு https://forms.gle/JZHuZiW6H2gTyb7H6 என்ற Google form இணைப்பில் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் 21-ந் தேதி ஆர். வி. எல். நகர், விளமல், மன்னை சாலை, திருவாரூர் என்ற முகவரியில் செயல்பட்டு வரும் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் நேரில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.