ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி


ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி
x

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி

ராமநாதபுரம்


தமிழ்நாடு ஆசிரியர் தகுதி டெட் தேர்வு எழுத உள்ளவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் போன்ற பாடங்களுக்கு ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்புகள் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. வரும் செப்டம்பர் 2-ந்தேதி முதல் வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. ஆசிரியர் தகுதி டெட் தேர்வுக்கு தயாராகும் வேலை தேடுபவர்கள், தன்னார்வ பயிலும் வட்டத்தில் செயல்படும் போட்டி தேர்வுகளுக்கான நூலக வசதியையும் பயன்படுத்திக் கொண்டு தேர்வுக்கு தங்களை தயார் செய்து கொள்ளலாம். இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்க ஆர்வமும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் சுய விவரங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். இப்பயிற்சி வகுப்புகள் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொண்டு தங்களை பதிவு செய்து கொண்டு இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயனடையுமாறு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.


Next Story