தேன்கனிக்கோட்டையில் விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகள்


தேன்கனிக்கோட்டையில் விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகள்
x

தேன்கனிக்கோட்டையில் விவசாயிகளுக்கு இலவசமாக தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட கோட்டை உளிமங்கலம், நாகமங்கலம், ஜே.காருப்பள்ளி, ஊடேதுர்க்கம் ஆகிய 5 ஊராட்சிகள் கெலமங்கலம் வட்டார அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் கோட்டை உளிமங்கலம் கிராமத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் விவரங்கள் ஆன்லைன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கலா இலவசமாக வழங்கினார்.

பின்னர் அவர் பேசும் போது, 'விவசாய நிலங்களில் பசுமை போர்வையுடன் கூடுதல் வருமானம் பெற தமிழக அரசு 100 சதவீத மானியத்தில் மரக்கன்றுகளை வழங்குகிறது. இதற்கு பராமரிப்பு செலவு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. எனவே தேக்கு, செம்மரம், நாவல், நெல்லி, இலுப்பை, புங்கன், வேம்பு போன்ற மரக்கன்றுகளை விவசாயிகள் ஆன்லைனில் உழவன் செயலியில் பதிவு செய்து பெற்று கொள்ளலாம்' என்றார்.


Next Story