அரசு பள்ளிகளுக்கு இலவச வண்ண தொலைக்காட்சி
வாய்மேடு அருகே அரசு பள்ளிகளுக்கு இலவச வண்ண தொலைக்காட்சி
நாகப்பட்டினம்
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி, அண்ணாப்பேட்டை ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகளுக்கு இலவச வண்ண தொலைக்காட்சி வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம் முருகையன் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் 3 பள்ளிகளுக்கும் இலவச வண்ண தொலைக்காட்சியை வழங்கினார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் வனிதா ரவிச்சந்திரன், தமிழ்ச்செல்விகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர்கள் வைத்தியநாதன், கோமதிதனபால், வக்கீல் பாரிபாலன், ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் கோவிந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story