விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி
வேட்டைகாரனிருப்பு அரசினர் மேல்நிைலப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி
நாகப்பட்டினம்
வேளாங்கண்ணி:
கீழையூர் ஒன்றியம் வேட்டைக்காரனிருப்பு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் பீட்டர் பிளாரன்ஸ் தலைமை தாங்கினார். கீழையூர் வட்டார வேளாண்மை வளர்ச்சிக்குழு தலைவரும், வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சி துணை தலைவருமான தாமஸ்ஆல்வா எடிசன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை வழங்கினார். இதில் வட்டார வேளாண்மை வளர்ச்சிக்குழு உறுப்பினர் மரிய சார்லஸ், மாவட்ட கவுன்சிலர் கவுசல்யா இளம்பரிதி, ஒன்றிய கவுன்சிலர் நாகரெத்தினம், ஊராட்சி மன்ற தலைவர் கலைமணி ஜெகதீசன் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story