திருச்செந்தூர் கோவிலில் முதியவர்களுக்கு தனிப்பாதையில் இலவச தரிசனம்; விரைவில் தொடங்க ஏற்பாடு


திருச்செந்தூர் கோவிலில் முதியவர்களுக்கு தனிப்பாதையில் இலவச தரிசனம்; விரைவில் தொடங்க ஏற்பாடு
x

திருச்செந்தூர் கோவிலில் முதியவர்களுக்கு தனிப்பாதையில் இலவச தரிசனத்துக்கான ஏற்பாடுகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கோவிலில் பக்தர்கள் எளிதில் சாமி தரிசனம் செய்யும் வகையில், ரூ.100 கட்டண தரிசனம், இலவச பொது தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். எனினும் வார விடுமுறை நாட்கள், விழாக்காலங்களில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிவதால் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகபெருமானை தரிசிக்கின்றனர். இந்த நிலையில் கோவிலில் முதியவர்கள் எளிதில் சாமி தரிசனம் செய்யும் வகையில், தனி வரிசை தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி கோவிலில் சண்முகவிலாச மண்டபத்தில் துலாபாரம் வாசல் அருகில் முதியவர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும் வகையில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு முதியவர்கள் அமர்ந்து செல்லும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

60 வயதை கடந்த முதியவர்களின் உரிய ஆவணங்களை சரிபார்த்து புதிய வரிசையில் விரைவில் அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story