9¾ லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள்


9¾ லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள்
x

தீபாவளி பண்டிகையையொட்டி ஓய்வூதியதாரர்கள், ரேஷன் அட்டைதாரர்களுக்கு 9¾ லட்சம் இலவச வேட்டி, சேலைகள் விரைவில் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர்

இலவச வேட்டி, சேலை

தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் தீபாவளி, பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் அவர்களுக்கு வருகிற தீபாவளி பண்டிகையையொட்டி இலவச வேட்டி, சேலை வழங்கப்பட உள்ளது.

இதையொட்டி வேலூர் மாவட்டத்தில் வேட்டி, சேலை வாங்குபவர்கள் குறித்த பட்டியல் சேகரிக்கப்பட்டு சென்னை அலுவலகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

9¾ லட்சம் பேருக்கு

அதன்படி வேலூர் மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறும் 39,238 ஆண்களுக்கு வேட்டிகளும், 1,00,051 பெண்களுக்கு சேலைகளும் வழங்கப்படுகிறது. இதுதவிர ரேஷன் அட்டைதாரர்கள் 4,23,341 பெண்களுக்கு சேலைகளும், 4,22,613 ஆண்களுக்கு வேட்டிகளும் வழங்கப்பட உள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 9 லட்சத்து 85 ஆயிரத்து 249 வேட்டி, சேலைகள் வழங்கப்பட உள்ளது.

சில தாலுகா அலுவலகங்களுக்கு வேட்டி, சேலைகள் வந்த வண்ணம் உள்ளது. அனைத்தும் வரப்பெற்ற பின்னர் இலவச வேட்டி, சேலைகள் விரைவில் வழங்கும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story