செந்துறையில் இலவச இ-சேவை மையம்

செந்துறையில் இலவச இ-சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், செந்துறையில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நம்ம குன்னம் என்ற பெயரில் இ- புகார் மையம் மற்றும் இ-சேவை மையத்தை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இதில் வேலை வாய்ப்பு பதிவு, சிட்டா, பட்டா நகல், குடும்ப அட்டை, உதவி பதிவுகள், வருமான சான்று, இருப்பிட சான்று உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் இலவசமாக பதிவு செய்து பொதுமக்களுக்கு வழங்கப்படும். வாரத்தில் அனைத்து நாட்களும் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் பயன்பெரும் வகையிலும், வயதானோர் நீண்ட தூரம் நடக்காமல் பஸ் நிறுத்தம் அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் செந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் மற்றும் திரளான தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டுள்ளார்.
Related Tags :
Next Story






