ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்: திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்


ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்: திட்டத்தை தொடங்கி வைத்தார்  முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் .

கரூர்,

கரூரில் ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் .

பின்னர் பேசிய முக ஸ்டாலின் கூறியதாவது ;

மண் காக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதால் என் மனதும் குளிர்ந்துள்ளது. தமிழக அரசின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் நாள் இந்த நாள் .இதற்கு முன் எந்த அரசும் இப்படியொரு சாதனையை செய்தது கிடையாது.

ஒரு லட்சம் இலவச மின் இணைப்பு சாத்தியமா? என்று கேட்டார்கள். முடியுமா? என்பதை முடித்து காட்டுவதுதான் திமுக. தமிழ்நாட்டில் விலைவாசி குறைவாக உள்ளது: பணப்புழக்கம் அதிகரித்துள்ளது .தமிழ்நாட்டில் வாழ்க்கை தரம் நிலையானதாக உள்ளது. என தெரிவித்தார்.


Related Tags :
Next Story