இலவச கண் சிகிச்சை முகாம்


இலவச கண் சிகிச்சை முகாம்
x
திருப்பூர்


தாராபுரத்தில் வி.எஸ்.என். ஆறுசாமி விழிக் கொடை மன்றம் தொடக்க விழாவில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில் 25 நபர்கள் கண்தானம் வழங்கினர்.

தாராபுரத்தில் வி.எஸ்.என். ஆறுசாமி விழிக் கொடை மன்றம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் அரிமா சங்க அரங்கில் நடைபெற்றது. முகாமுக்கு தாராபுரம் நகர அரிமா சங்க தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் பசுபதி மற்றும் மனோஜ், லயன்ஸ் அறக்கட்டளை தலைவர் கந்த விலாஸ் கே.கோபாலகிருஷ்ணன், விவேகம் மெட்ரிக்குலேசன் பள்ளி தாளாளர் சுப்பிரமணியம் ஆகியோர் வி.எஸ்.என் ஆறுச்சாமி விழிக் கொடை மன்றம் தொடக்கம் மற்றும் அவருடைய சாதனைகள் குறித்து பேசினர். பின்னர் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் அரவிந்த் தலைமையில் கண் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கிட்டப்பார்வை, தூரப்பார்வை கண் புரை, நீர்வடிதல் உள்ளிட்ட கண் நோய்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்தனர்.

அதில் மொத்தம் 113 பேர்களுக்கு கண் பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டதில் அறுவை சிகிச்சைக்காக 18பேர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அப்போது வி.எஸ்.என் ஆறுச்சாமி விழிக் கொடை மன்றத்துக்கு தேர்ப்பட்டி ஆதித்தியன் தலைமையில் 10 பேர், விழுதுகள் அமைப்பினர் சார்பில் 15 நபர்கள் என 25 பேர் கண் தானம் செய்தனர். இதில் நகர அரிமா சங்க பொருளாளர் சுப்பிரமணி, நகர அரிமா சங்க முன்னாள் தலைவர் கந்தசாமி, உறுப்பினர்கள் தங்கவேல், சுப்பிரமணி மற்றும் மணிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story