இலவச கண் பரிசோதனை முகாம்


இலவச கண் பரிசோதனை முகாம்
x
தினத்தந்தி 11 Jun 2023 12:30 AM IST (Updated: 11 Jun 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

வாசுதேவநல்லூரில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

தென்காசி

வாசுதேவநல்லூர்:

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பவுண்டேஷன், நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து வாசுதேவநல்லூர் நாடார் உறவின்முறை காமராஜர் மகளிர் உயர்நிலை பள்ளியில் இலவச கண் சோதனை முகாமை நடத்தியது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வாசுதேவநல்லூர் கிளை மேலாளர் பி.அர்ஜூன் தலைமை தாங்கினார். பள்ளி கமிட்டி தலைவர் கு.தவமணி, செயலாளர் அழகர்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பவுன்டேஷன் நிர்வாக அதிகாரி சவுந்தரபாண்டியன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்தனா். கண் கண்ணாடி வழங்கப்பட்டது.



1 More update

Next Story