Normal
இலவச கண் சிகிச்சை முகாம்
வத்திராயிருப்பு அருகே இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
விருதுநகர்
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட வ.புதுப்பட்டி பேரூராட்சியில் பணியாற்றக்கூடிய செயல் அலுவலர், தூய்மை பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், ஆபரேட்டர்கள், மேற்பார்வையாளர்கள் என 50-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு பேரூராட்சி அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் கண் குறைபாடு உள்ள பணியாளர்களுக்கு அதற்கு உண்டான சிகிச்சை அளிக்கப்பட்டது. அறுவை சிகிச்சை கூடிய பணியாளர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்டனர். முகாமினை பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி தொடங்கி வைத்தார். வ.புதுப்பட்டி பேரூர் கழக செயலாளர் சாந்தாராம், பேரூராட்சி செயல் அலுவலர் அருணாச்சலம் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story