இலவச கண் சிகிச்சை முகாம்


இலவச கண் சிகிச்சை முகாம்
x

குடியாத்தம் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

வேலூர்

குடியாத்தம் ரோட்டரி சங்கம், நல்லம்மைராமநாதன் ரோட்டரி மருத்துவமனை, கோவை சங்கரா கண் மருத்துவமனை, வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களில் சார்பில் மறைந்த கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் நிர்வாக குழு உறுப்பினர் எஸ்.உஷாராணியின் நினைவாக இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு ரோட்டரி சங்க தலைவர் ஏ.மேகராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் கே.சந்திரன், பொருளாளர் கே.எம். ராஜேந்திரன், சமுதாய பணி இயக்குனர் பாபு, கண் சிகிச்சை முகாம் சேர்மன் ரங்காவாசுதேவன், முன்னாள் தலைவர்கள் ஆர்.வி. ஹரிகிருஷ்ணன், என்.எஸ்.குமரகுரு, டி.என்.ராஜேந்திரன், எஸ்.சேட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண் சிகிச்சை முகாமை ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஜே.கே.என்.பழனி, முன்னாள் ஆளுநர் ஸ்ரீதர்பலராமன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

முகாமில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை பெற்றனர். இதில் 268 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.


Next Story