இலவச கண் சிகிச்சை முகாம்
ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் இலவச கண் சிகிச்சை முகாம்
இட்டமொழி:
நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் ஏற்பாட்டின் பேரில், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ரூபி மனோகரன் சாரிடபிள் டிரஸ்ட், நெல்லை அகர்வால் கண் மருத்துவமனை, திருக்குறுங்குடி சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை ஆகியவை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை களக்காடு டோனாவூர் உவாக்கர் மேல்நிலைப்பள்ளியில் நடத்தியது. இதில் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது.
முகாமில் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் முருகன், கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் அகிலன், முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் ஞானசேகர், சதீஷ், திருக்குறுங்குடி பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவி ராசாத்தி, வீரபுத்திரன், டோனாவூர் கவுன்சிலர் பெல், களக்காடு தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஸ்ரீதேவி, சாலை கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.