இலவச கண் சிகிச்சை முகாம்
பனவடலிசத்திரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
பனவடலிசத்திரம்:
மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், நண்பர்கள் ரத்ததான கண்தான விழிப்புணர்வு குழு, கிருஷ்ணம்மாள் நினைவு கண் தான அறக்கட்டளை, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, வடக்கு பனவடலி பஞ்சாயத்து ஆகியன இணைந்து பனவடலிசத்திரம் சமுதாய நலக்கூடத்தில் இலவச கண் சிகிச்சை ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் அளவுகள் கண்டறிதல் முகாம் நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் முத்துலட்சுமி ஏசுதாஸ் தலைமை தாங்கினார். மேலநீலிதநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் முன்னிலை வைத்தார். மேலநீலிதநல்லூர் ஊராட்சி செயலர் செல்வராஜா வரவேற்றார். ரத்ததானம் பற்றி சிவராமன், கண்தானம் பற்றி குமரேசன் மற்றும் பஞ்சாயத்து துணைத் தலைவர் பாக்கியலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அகர்வால் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் லயனல்ராஜ், மருத்துவ குழு ஆசை மாணிக்கம் ஆகியோர் செய்திருந்தனர். விழி ஒளி ஆய்வாளர் சிஞ்சு கண் பரிசேதனைகளை செய்தார். முகாமில் கண் சம்பந்தப்பட்ட பரிசோதனை, கண்புரை கண்டறிதல் ஆகியவை நடைபெற்றது. இதில் 100 பேர் கலந்து கொண்டனர். அதில் 10 பேர் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர்.