இலவச கண் சிகிச்சை முகாம்


இலவச கண் சிகிச்சை முகாம்
x

பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய பகுதியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

திருநெல்வேலி

முக்கூடல்:

பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய பகுதியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. நெல்லை வண்ணார்பேட்டை ஐஸ்வர்யா கண் பரிசோதனை மையம் சார்பில் இந்த முகாம் ரெங்கசமுத்திரம் ஊராட்சி வழுதூர் சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. இதில் பாப்பாக்குடி யூனியன் துணை தலைவர் மாரிவண்ணமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ரங்கசமுத்திரம் பஞ்சாயத்து தலைவர் கஸ்தூரி இசக்கி பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அய்யப்பன் முன்னிலை வகித்தார். இதில் 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றனர்.

1 More update

Next Story