இலவச கண் சிகிச்சை முகாம்


இலவச கண் சிகிச்சை முகாம்
x

ஜெயங்கொண்டத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

அரியலூர்

ஜெயங்கொண்டம் சோழன் சிட்டி லயன்ஸ் சங்கம், அரியலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு நல சங்க நிதி உதவியுடன் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து ஜெயங்கொண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது. முகாமிற்கு ஜெயங்கொண்டம் கே.ஆர்.டி. டி.வி.எஸ். உரிமையாளர் ராஜன், பி.ஜி.ஆர். நகை மாளிகை உரிமையாளர் பி.ஜி.ரமேஷ்குமார், பரப்புரமும் பவுண்டேஷன் தலைவர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் 629 பயனாளிகள் கலந்து கொண்டனர். இதில், 112 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு பஸ் மூலம் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அறுவை சிகிச்சை செய்து 2 நாட்களில் மீண்டும் ஜெயங்கொண்டத்தில் அழைத்து வந்து விடப்படுவார்கள். மீண்டும் அவர்களுக்கு மறுபரிசோதனை இலவசமாக செய்யப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஜெயங்கொண்டம் சோழன் சிட்டி லயன்ஸ் சங்க தலைவர் வினோத்குமார், செயலாளர் வெங்கன்ன பாபு, பொருளாளர் உதயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story