இலவச கண் சிகிச்சை முகாம்


இலவச கண் சிகிச்சை முகாம்
x
தினத்தந்தி 12 March 2023 12:15 AM IST (Updated: 12 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் சங்கரமடத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரம் கோவில் அருகே உள்ள ஸ்ரீகாஞ்சி காமகோடி சங்கரமடம் மற்றும் அகர்வால் கண் மருத்துவமனையும் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நேற்று சங்கர மடத்தில் நடத்தினர். முகாமை ராமேசுவரம் நகரசபை சேர்மன் நாசர்கான் தொடங்கி வைத்தார். ராமேசுவரம் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று கண் டாக்டர்களை சந்தித்து ஆலோசனை பெற்று சிகிச்சை பெற்றனர். இந்த முகாமில் தூரத்து பார்வை, கிட்டத்து பார்வை, கண்புரை, கண் பிரஷர் உள்ளிட்ட கண் தொடர்பான பலவிதமான நோய்களுக்கும் மருத்துவ நிபுணர்கள் பொது மக்களுக்கு அதற்கேற்ற தகுந்த ஆலோசனைகளையும் வழங்கினார்கள். முகாமில் சங்கரமட மேலாளர் ஆடிட்டர் சுந்தர், நிர்வாகிகள் ராஜசேகரன், சந்திரசேகர் பா.ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story