இலவச கண் சிகிச்சை முகாம்


இலவச கண் சிகிச்சை முகாம்
x

இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை கலைக்கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் அயன்சிங்கம்பட்டியில் 7 நாட்கள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக அம்பை கல்லூரி மற்றும் நெல்லை அகர்வால் கண் மருத்துவமனை, அப்போலோ பார்மசி ஆகியவை இணைந்து இலவச ரத்த பரிசோதனை மற்றும் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது. கல்லூரி முதல்வர் சவுந்தரராஜா, அயன்சிங்கம்பட்டி பஞ்சாயத்து தலைவர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இதில் பேராசிரியர்கள் தீபலட்சுமி, தனலட்சுமி, சரவணன், கல்லூரி உடற்கல்வி இயக்குனர் சிவகுமார், அகர்வால் கண் மருத்துவமனை மக்கள் தொடர்பு அதிகாரி மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரி சங்கர் செய்து இருந்தார்.

1 More update

Next Story