வாகன ஓட்டிகளுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்


வாகன ஓட்டிகளுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்
x
தினத்தந்தி 28 Sept 2023 12:15 AM IST (Updated: 28 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

வாகன ஓட்டிகளுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

சிவகங்கை

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிவகங்கை வட்டார போக்குவரத்து துறை மற்றும் மதுரை அரவிந்த் மருத்துவமனை இணைந்து டிரைவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.செந்தில்நாதன் (சிவகங்கை), எஸ்.மாங்குடி (காரைக்குடி) ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் வாகன ஓட்டிகள், கனரக வாகனங்கள் மற்றும் அரசு பஸ் டிரைவர்களுக்கு, சாலை பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டு. ரத்த அழுத்த பரிசோதனை, இலவச கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவட்டம் 500-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர்.


Next Story